நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது: மாநில போக்குவரத்து அமைச்சர் தகவல்

கூச்சிங்:

சரவாக் மாநிலத்தின் பொருளாதார மீட்சி நடவடிக்கையால் சுற்றுலாத் துறையை மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த சரவாக்கிற்கான விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மாநில போக்குவரத்து அமைச்சர் டத்தோ லீ கிம் ஷின் கூறினார்.

இன்று சரவாக்கில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கான புதிய விமான  அட்டவணை மலேசிய விமானக் கமிஷனால் (Malaysian Aviation Commission (MWCOM) அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இனி வாரத்திற்கு 76 விமானங்கள் அந்த மாநிலத்திற்கு வந்து செல்லும்.

மொத்தத்தில், கூச்சிங்கிற்கு வாரத்திற்கு 42 விமானங்கள், மிரி வாரத்திற்கு 19 விமானங்கள், பிந்துலு வாரத்திற்கு நான்கு விமானங்கள், சிபு வாரத்திற்கு ஆறு விமானங்கள், லிம்பாங் மற்றும் லாவாஸ் வாரத்திற்கு இரண்டு விமானங்கள், மூலு வாரத்திற்கு மூன்று விமானங்கள் என்று அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் ஏற்கனவே தேசிய மீட்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் நுழைந்திருப்பதால் சரவாக் நகருக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு விமானப் போக்குவரத்து எளிதாக அமையும்; பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எங்களின் நம்பிக்கை.

"கூடுதலான விமான சேவைகளுக்கான அனுமதி கிடைத்திருப்பதால், விமான நிறுவனங்கள் நியாயமான மற்றும் மலிவு கட்டணங்களை மக்களுக்கு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் அமைச்சர் டத்தோ லீ கிம் ஷின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset