நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட் -19 தொற்று காரணமாக மௌலுதுர் ரசூல் கொண்டாட்டங்களை ஒத்திவைக்க ஜோகூர் அரசு உத்தரவு

ஜோகூர் பாரு:

கோவிட் -19 தொற்று அபாயங்கள் காரணமாக  அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறவிருந்த மௌலுதுர் ரசூல் கொண்டாட்டங்களை ஒத்திவைக்க ஜோகூர் அரசு முடிவு செய்துள்ளது.

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹீம் சுல்தான் இஸ்கந்தர் மௌலுதுர் ரசூல் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க  உத்தரவிட்டுள்ளதாக மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழு தலைவர் டோஸ்ரின் ஜர்வந்தி கூறினார்.

இருப்பினும், ஜோகூர் இஸ்லாமிய சமய கவுன்சில் (MAIJ) மற்றும் பிற அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP) இணங்க மாநில, மாவட்ட அளவிலான மௌலுதுர் ரசூல் கொண்டாட்டங்கள் ஆன்லைனில் ஒளிபரப்பப்படலாம் என்றார் அவர்.

அக்டோபர் 18 அன்று மாலை 6.30 மணிக்கு சுல்தான் அபுபக்கர் பள்ளிவாசலில் மாநில அளவிலான கொண்டாட்டம் நடைபெறும், அங்கு இமாம், இதரப் பணியாளர்கள் உட்பட 50 வருகையாளர்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் இருக்க முடியும்.

“மாவட்ட அளவிலான கொண்டாட்டம் ஒரே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிவாசல்களில் ஒரே எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் நடைபெறும்.

"பள்ளிவாசல்களிலும் ஸுராவ் தொழுகைக் கூடங்களிலும் மௌலுதுர் ரசூல் கொண்டாட்டங்களுடன் இணைந்து எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாமல் ஒத்திவைப்பு உத்தரவை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று டோஸ்ரின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset