நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தடத்திற்கேற்ப உருமாறும் சக்கரத்தைத் தென்கொரிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

தென் கொரியா:

தென்கொரிய ஆய்வாளர்கள் தடத்திற்கேற்ப உருமாறக்கூடிய புதிய வகைச் சக்கரத்தை உருவாக்கியுள்ளனர்.

அந்தச் சக்கரம் பயணம் செல்லும் பாதையில் அதன் அரைவட்ட நீளத்தைவிட 1.3 மடங்கு உயரமாகவுள்ள தடங்கலின் மீதும் உருண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் மூலம் தானியக்க இயந்திரங்களைப் படிகளிலும்கூட எளிதாக ஏறவைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாகப் போர்ச் சூழல்களிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதக் கருவிகளை மேலும் சிறப்பாகச் செயலாற்றப் புதிய சக்கரம் உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதற்குமுன் தயாரிக்கப்பட்ட சக்கரங்களைவிட திடமான கம்பிகளும் வெளிப்புறச் சங்கலியும் கொண்டுள்ள சக்கரத்தில் உள்ள உணர்கருவியின் (sensor) மூலமாகவே அது தடத்திற்கேற்ப உருமாறுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset