நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெரு முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு மலேசியா பங்களிக்கும்: பிரதமர் அன்வார் உறுதி

பெரு: 

ஹலால் சான்றிதழ் வழங்குமுறையை எளிதாக்குவது உட்பட பெருவிலுள்ள முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு மலேசியா தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்த நிலைப்பாட்டைப்  பெரு இஸ்லாமிய சங்கத்துடனான சந்திப்பின் போது பிரதமர் அன்வார் கூறினார். 

பெருவியன் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முராத் ஹமிதா தலைமையில் அவர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சந்திப்பில் பெரு நாட்டில் முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். 

இஸ்ரேலியர்களால் ஒடுக்கப்படும் பாலஸ்தீனம் மற்றும் லெபனானிலுள்ள முஸ்லிம் சகோதரர்களின் அவலத்திற்காக எப்போதும் முன்னணியில் இருக்கும் மலேசியாவின் முயற்சிகளை பெருவியன் இஸ்லாமிய சங்கம் பாராட்டியது

இதேவேளை, ஸ்பெயினில் பிரத்யேகமாக அச்சிடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட அல்-குர்ஆனின் 50 பிரதிகளை வழங்கியதோடு, பெருவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கு நன்கொடையையும் பிரதமர் வழங்கினார்.

நேற்று, இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு பெருவின் அதிபர் டினா எர்சிலியா பொலுவார்டே ஜெகர்ராவுடன் செய்தியாளர் சந்திப்பின் போது, ​​லத்தீன் அமெரிக்க சந்தையில் ஊடுருவும் முயற்சியில், பெருவில் ஹலால் பொருளாதார மண்டலத்தை உருவாக்க மலேசியா திட்டமிட்டுள்ளதாக அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset