செய்திகள் கலைகள்
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர்.
முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம்.
40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்கள்.
அதன்படி வருகிற அக்டோபர் 16ஆம் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm
அமீர் கானுக்கு எதிரான DEEP FAKE தேர்தல் பிரச்சார வீடியோ: போலீஸார் வழக்கு
April 19, 2024, 1:22 pm
வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் விஜய்
April 19, 2024, 12:54 pm
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
April 19, 2024, 10:17 am
மக்களவை தேர்தல்; முதல் ஆளாக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்குமார்
April 18, 2024, 5:48 pm
மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ்
April 18, 2024, 5:45 pm