செய்திகள் உலகம்
அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி
வாஷிங்டன்:
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்டத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றிபெற்றனர்.
வர்ஜீனியா மாகாணத்தின் 10ஆவது மாவட்டத்திலிருந்து இந்திய - அமெரிக்க வழக்குரைஞரான சுஹாஸ் சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
இவரைத் தவிர, தற்போது எம்.பி.க்களாக இருக்கும் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமீளா ஜெயபால், ஸ்ரீ தானேதர் ஆகிய 5 இந்திய அமெரிக்கர்களும் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 5ஆக இருக்கும் இந்திய வம்சாவளி
எம்.பி.க்களின் எண்ணிக்கை, 6ஆக உயர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm