செய்திகள் உலகம்
பிரிட்டனில் மேலும் இருவருக்கு MPOX நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரிட்டன்:
பிரிட்டனில் மேலும் இருவருக்கு MPOX எனும் குரங்கம்மை நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிய Clade 1B ரகக் கிருமியால் எற்பட்டுள்ளது.
]ஏற்கெனவே பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆப்பிரிக்காவில் MPOX நோய்த் தொற்று பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அதிகாரிகள் சென்ற வாரம் தெரிவித்தனர்.
மீண்டும் லண்டனுக்குத் திரும்பிய அவருக்கு நோய் தொற்றியது கண்டறியப்பட்டது.
அவர் வீட்டில் உள்ள மேலும் இருவருக்கு நோய் பரவியுள்ளதாக மருத்துவப் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
அதனால் mpox நோய்த் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றுக்கு உயர்ந்துள்ளது.
பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தாலும் ஒரே வீட்டில் வசிப்போரிடையே நோய்த் தொற்று எளிதாகப் பரவக்கூடும் என்று அமைப்பு கூறியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உலகச் சுகாதார நிறுவனம் MPOX நோயை உலகப் பொதுச் சுதாதார நெருக்கடியாக அறிவித்தது.
இதுவரை ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்ட நோய்த் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm