நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டோமினோஸ் பிசா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

மிச்சிகன்:

டோமினோஸ் பிசா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறார்.

அவர் 20 ஆண்டுக்கும் மேல் அந்தப் பதவியில் இருந்தார்.

டோன் மெய்ஜ் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள ரெட்கிளிஃப் எனும் நகரில் பீசாவை விநியோகிக்கும் வேலையில் இருந்தவர்.

அவர் வேலை செய்த நிறுவனம் பிறகு ஆஸ்திரேலியாவில் Domino's நிறுவனத்தின் நிர்வாகத்தை எடுத்தது.

டோன் மெய்ஜ் 2002-ஆம் ஆண்டில் டோமினோஸ் பிசா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவருடைய நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலந்து, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த 12 நாடுகளில் விரிவாக்கம் கண்டன.

ஆனால் கோவிட்-19 சூழலுக்குப் பிறகு விற்பனையைத் தக்க வைத்துக்கொள்வதில் நிறுவனம் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

டோன் மெய்ஜின் பெரும் பங்களிப்பிற்கு நிறுவனம் நன்றி தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset