நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் காற்றின் தரம் மோசமடைந்தது  

லாஹூர்:

பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் சுமார் ஒரு வாரத்துக்குத் தொடக்கப் பள்ளிகளை மூடப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

14 மில்லியன் மக்கள் வாழும் நகரில் பல நாள்களாகக் காற்றின் தரம் மோசமாகியிருக்கிறது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் தீபாவளியைத் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசம் அடைந்தது. 

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300ஐத் தாண்டினால் அது ஆபத்தைக் குறிக்கிறது.

லாகூரில் அந்தக் குறியீடு 1,000ஐத் தாண்டியதாக IQAir தரவுகள் காட்டுகின்றன.

அடுத்த 6 நாள்களுக்குக் காற்றின் தரத்தில் மாற்றம் இருக்காது என்று வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.

அதனால் தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.

அடுத்த சனிக்கிழமை (10 நவம்பர்) அன்று பள்ளிகளை மூடும் திட்டம் நீட்டிக்கப்படவேண்டுமா என்பது மீண்டும் பரிசீலிக்கப்படும்.

பள்ளிகளில் முகக்கவசம் அணியப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset