நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார் 

திருவனந்தபுரம்:

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர், தமிழில், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வந்தார். 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Stars&Family - Nedumudi Venu with family | Facebook

73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. 

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை  பலனளிக்காமல் அவர் காலமானார். 

இதையடுத்து சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset