நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள கூடுதல் மாவட்ட ஆட்சியர் தற்கொலை: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கைது

திருவனந்தபுரம்:

கண்ணூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் திவ்யாவை கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் திவ்யா விண்ணப்பத்திருந்தார். பங்க் அமையும் இடத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி  நவீன் பாபு நிறுத்தி வைத்து பின்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இரு தினங்களுக்கு பிறகு நவீன் பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது வழியனுப்பு விழாவில் கலந்து கொண்ட திவ்யா, இந்த பணியிட மாறுதலுக்கு தான் காரணம் என்று கூறி கிண்டல் செய்துள்ளார். அடுத்த நாளே, தனது அரசு இல்லத்தில் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நவீன் பாபுவின் மனைவியும், வட்டாட்சியருமான மஞ்சுஷா அளித்த புகாரின் பேரில், திவ்யா மீது தற்கொலைக்குத் தூண்டியது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரத்து செய்ததால் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில், அரசு அதிகாரியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு திவ்யா செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset