நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவின் BRI திட்டத்தில் இணைய பிரேஸிலும் மறுப்பு

புது டெல்லி:

சீன வர்த்தக வழித்தட திட்டத்தில் (BRI)  சேர, இந்தியாவை தொடர்ந்து பிரேஸிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்த நாடுகள் சேர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.

அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தத் திட்டத்துக்கு ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தத் திட்டத்துக்கு தற்போது பிரேஸிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரேஸில் நாட்டு அதிபர் லூலா டசில்வா கூறுகையில், சீனாவின் இந்தத் திட்டத்தில் பிரேஸில் இணையாது. இதற்கு பதிலாக சீன முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மாற்று வழிகளை கண்டறிய பிரேஸில் முயற்சிக்கும் என்றார்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களை இணைக்கும் இந்த வழித்தடம்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுக்கு செல்வதால்  இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset