நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரூ.27 கோடி கடன்: 'டாக்டர்' திரைப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

சென்னை:

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் வெளியீடு கண்டுள்ள நிலையில், அந்தப் படத்தால் அவருக்கு ரூ.27 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'டாக்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர், அதன் உரிமையை வைத்து ஃபைனான்சியர் ஒருவரிடம் 27 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் பட வெளியீட்டுத் தேதியை அறிவித்த நிலையில், கடன் கொடுத்தவர் அதை திருப்பிச் செலுத்துமாறு கூற, தயாரிப்பாளர் தரப்பால் முடியவில்லை.

Twitter reviews Sivakarthikeyan and Nelson's Doctor, calls it super hit  entertainer - Movies News

இதனால் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையறிந்த சிவகார்த்திகேயன், அந்தத் தொகைக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதற்கான பத்திரங்களிலும் அவர் கையெழுத்திட்டதாகத் தகவல். அதன் பிறகே 'டாக்டர்' சிக்கலின்றி திரை கண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset