செய்திகள் இந்தியா
கனமழை எச்சரிக்கையால் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை:
அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உட்பட அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிப்புரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 13.10.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை மாதிரிகளின் (forecast models) அடிப்படையில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது.
14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரிய வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:15 pm
ஜார்க்கண்டில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் போட்டி
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 18, 2024, 10:04 pm
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
November 17, 2024, 5:17 pm
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
November 16, 2024, 9:56 pm
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm