செய்திகள் விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ், டிஎஸ்பியாக பொறுப்பேற்றார்
ஹைதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ், தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சிராஜுக்கு டிஎஸ்பி பொறுப்பு வழங்கி தெலங்கானா அரசு கவுரவித்துள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ்.
அவரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு குரூப் 1 பணியிடம் வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரேட்டி அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து அரசு வேலை தொடர்பான நியமனங்களில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தெலங்கானா அரசின் அறிவிப்பின்படி இன்று தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர் முஹம்மது சிராஜ் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, டி20 உலக கோப்பை போட்டிகளில் சிராஜ் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.
அதேபோல ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்திய அணியில் முஹம்மது சிராஜ் மூன்று வடிவ போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்ட அவருக்கு டிஎஸ்பி பணி வழங்கி கவுரவித்துள்ளது தெலங்கானா அரசு. முஹம்மது சிராஜ் மட்டும் கவுரவிக்கப்படவில்லை. இரண்டு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனையும் அரசு கவுரவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:00 pm
ஜெர்மன் பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
November 23, 2024, 11:59 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
November 22, 2024, 10:23 am
பெப் குவார்டியாலோவின் ஒப்பந்தம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிப்பு
November 22, 2024, 10:22 am
ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
November 21, 2024, 8:35 am
13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகைதரும் மெஸ்ஸி: கேரளா கால்பந்து போட்டியில் களமிறங்குகிறார்
November 21, 2024, 8:31 am
மெஸ்ஸி உலக சாதனை: இந்தாண்டை வெற்றியுடன் முடித்த அர்ஜெண்டினா
November 20, 2024, 4:21 pm
டேவிஸ் கோப்பை: கண்ணீருடன் விடைபெற்ற நடால்
November 20, 2024, 8:42 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி சமநிலை
November 19, 2024, 8:19 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா - இந்தியா சமநிலை
November 19, 2024, 8:16 am