நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்

மாட்ரிட்: 

பிரெஞ்ச் ஓபன் முடிசூடா மன்னன், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் நாயகனான ரஃபேல் நடால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த நடால் 2001-ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். 

அடுத்த 4 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். 

அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றி. அதிலும் ‘ஓபன் ஈரா’ எனப்படும் 1969/70-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக முறை பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் வென்ற வீரர் என்ற பெருமையும் நடாலுக்கு மட்டுமே உண்டு. 

மேலும், 2010-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். முன்னதாக 3முறை ஹாட்ரிக் சாம்பியன் ஆகியுள்ளார். கூடவே ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என எல்லா கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பட்டம் வென்றுள்ளார்.

சில சமயம் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். 

மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால் நேற்று திடீரென இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கூடவே சமூக ஊடகங்களில் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ என பல்வேறு மொழிகளில் பதிவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset