நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் குப்பைக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு பார்த்த இடத்திலேயே அபராதம்: சென்னை மாநகராட்சி அதிரடி 

சென்னை: 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளை விதிகளை மீறி பொது இடங்களில் கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு ஸ்பாட் பைன் முறையில் அபராதம் வசூலிக்க பிரத்யேக கருவி மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமீறி பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். 

ஆனாலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது. 

இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சிச் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000, கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் முறையாக குப்பைத் தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset