நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஓய்வு

மாட்ரிட்:

 கால்பந்து அரங்கில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக இனியஸ்டா அறிவித்து உள்ளார்.

ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரஸ் இனியஸ்டா (வயது 40).

கடந்த 2006 முதல் 2018 வரை ஸ்பெயின் அணிக்காக 131 போட்டி விளையாடி 13 கோல் அடித்தார். 

2008, 2012ல் யூரோ கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

2010 பிபா உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து, ஸ்பெயின் சாம்பியன் ஆக கைகொடுத்தார்.

கிளப் அரங்கில், 2002ல் பார்சிலோனா அணிக்காக அறிமுகம் ஆனார். மொத்தம் 674 போட்டிகளில் பங்கேற்றார். 

பார்சிலோனா அணிக்காக, ஸ்பெயின் வீரர்கள் இனியஸ்டா, ஜாவி ஹெர்ணான்டஸ், பாஸ்குயட்டுடன், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி இணைந்து மத்திய களத்தில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தற்போது 22 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கூறுகையில்,

கடின உழைப்பு, விடா முயற்சியால் சர்வதேச அரங்கில் வெற்றிகரமாக வலம் வந்தேன், என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset