நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஷ்யா உட்பட பல்வேறு தரப்பினருடன் வர்த்தக உறவு கொள்ள மலேசியாவுக்கு உரிமை உள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

ரஷ்யா உட்பட பல்வேறு தரப்பினருடன் வர்த்தக உறவு கொள்ள மலேசியாவுக்கு  அனைத்து உரிமைகளும் உள்ளன.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

சர்வதேச பிரச்சினைகளில் சமநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் அதே வேளையில், 

ரஷ்யா உட்பட பல்வேறு உலகளாவிய பங்காளிகளுடன் உறவுகளை வைத்துக்கொள்ளவும், கையாள்வதற்கும் மலேசியாவின் உரிமை உள்ளது.

மற்ற நாடுகளுக்கு எது சிறந்தது என்பதை மற்ற நாடுகள் தீர்மானிக்கக் கூடாது.

மேலும் வர்த்தக நாடான மலேசியா, உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டை வரவேற்கிறது.

சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியின் போது பிரிக்ஸ் அமைப்பில் சேர மலேசியாவின் விருப்பம் மற்றும் ரஷ்யாவுடனான நெருக்கமான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்வார், சமீபத்தில் ரஷ்யாவின்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்ததாக கூறினார். 

பிரிக்ஸ் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கவும், சர்ச்சை இல்லாத பகுதிகளில் வர்த்தகம், முதலீட்டைத் தொடரவும் எங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்க நான் ரஷ்யா சென்றேன்.

நாம் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கான எந்த காரணமும் எனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset