நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு போலிஸ் அனுமதி; பதிவு செய்த கட்சியாக அறிவிக்கப்பட்டதால் விஜய் மகிழ்ச்சி

சென்னை:

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரினர்.

இதையடுத்து, 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்குமாறு விக்கிரவாண்டி போலீஸார் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 6ஆம் தேதி பதில் கடிதம் அளித்தார். 

பின்னர்,இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விக்கிரவாண்டி போலிசார் தற்போது 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். 

இதற்கிடையே, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் தவெக இடம்பெற்றுள்ளதாக கட்சித் தலைவர் நடிகர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துநேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்கிற அடிப்படை கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே. 

எனினும் முழுமையான கொண்டாட்டத்துக்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான பதிவுக்காகவுமே காத்திருந்தோம். 

இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இந்தியதேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். 

அதை சட்டப்பூர்வமாக பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. 

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார் விஜய்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset