செய்திகள் தமிழ் தொடர்புகள்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
பழநி:
“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேல்கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்எல்ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது: கோயில்களை பார்த்துக்கொள்ள கூறி அறநிலையத்துறையை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார். அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் பழநியில் 58.77 ஏக்கர் நிலம் ரூ.58 கோடியில் கையகப்படுத்தப்பட உள்ளது.
அறுபடை வீடுகளிலும் ரூ.789 கோடியில் 251 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி முருகன் உட்பட 69 முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான்.
கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறையின் சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன்மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 6:06 pm
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
November 20, 2024, 12:50 pm
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை
November 18, 2024, 5:25 pm
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்
November 17, 2024, 4:31 pm
ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரி இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
November 16, 2024, 11:55 am
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்
November 13, 2024, 7:43 am
கவிக்கோ நினைவலைகள்
November 12, 2024, 2:04 pm
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
November 11, 2024, 4:20 pm
பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்
November 10, 2024, 2:50 pm
தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு
November 10, 2024, 9:13 am