நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கம்போடியாவின் ஆடை ஏற்றுமதி முதல் 8 மாதங்களில் 3.3% அதிகரித்துள்ளது: பிரதமர் ஹன் சென்

பெனோம் பென்: 

2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கம்போடியாவின் ஆடைத் தொழில் ஏற்றுமதியில் 3.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கம்போடிய வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி-ஆகஸ்ட் காலத்தில் 5.02 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை அந்த நாடு ஏற்றுமதி செய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.86 பில்லியன் டாலர்களிலிருந்து 3.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கம்போடியாவின் மிகப்பெரிய அந்நிய செலாவணி ஆடைத் தொழில். இந்தத் துறையில் சுமார் 1,100 தொழிற்சாலைகள் மற்றும் கிளைகள் உள்ளன. 

ஏறக்குறைய 750,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Cambodia PM threatens to deploy troops

கம்போடிய பிரதமர் ஹன் சென், கோவிட் -19 தடுப்பூசி இயக்க செய்தியாளர் சந்திப்பின் போது, ​​"எங்கள் ஆடைத் தொழில் இயல்பாகச் செயல்பட்டு வருகிறது, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு ஆடைகளைக் கொள்முதல் செய்ததால் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டோம்.

"ஏனென்றால் மற்ற ஆடை உற்பத்தி நாடுகளை விட நம் நாடு இப்போது கோவிட் -19 இலிருந்து பாதுகாப்பாக உள்ளது" என்று அவர் கூறினார்.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset