நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அண்ணாவை நினைவு கூர்வோம்

எனக்குப் மிகவும் பிடித்த உலகத் தலைவர் காந்தி
இந்திய அளவில் நேரு
தமிழகத் தலைவர் அண்ணா..
சித்தாந்தங்களைத் தாண்டி அணுகுமுறையிலும் எனக்குப் பிடித்தவர் அண்ணாதான்.

அண்ணாவின் வன்மை மேடைகளில் மட்டுமே..வாழ்வில் அவர் காட்டிய மென்மையை நான் அதிகம் நேசிக்கிறேன்.

தொண்டர்களின் மனதில் கட்சியைக் குடும்பமாக பாவிக்கிற எண்ணத்தை விதைத்தவர் அண்ணாதான்.

ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டை அவர்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்..டெல்லியை அவர்தான் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

தன்னம்பிக்கையின் உச்சம் அவர்.. உயிரோடிருந்தபோது அவருக்குச் சமமான நூற்றுக்கணக்கான தலைவர்கள் கட்சியில் உருவாகியிருந்தனர்..ஆனால் அவர்களில் எவரையும் அவர் கட்டம் கட்டவே இல்லை..அதனால்தான் அவர் அண்ணா.

கலையை அரசியலுக்குப் பயன்படுத்திய அதே நேரத்தில் அவர்களின் பின்னால் கட்சி போய்விடாமல் கொள்கையால் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்..அவர்களைத் திரையில் கொள்கை பேச வைத்தார்.

மாணவ சக்தியின் ஆற்றலைப் புரிந்து வைத்திருந்த அதே நேரத்தில் அவர்களின் வாழ்வை எதன் பெயரிலும் அழித்து விடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார்.

திராவிட இயக்கம் தன் சாராம்சத்தில் வன்முறை மீது துளியளவும் நம்பிக்கை இல்லாத இயக்கம்..இங்கு நிகழ்ந்தது துளியளவும்  ரத்தம் சிந்தாத புரட்சி..எந்த வன்முறையும் இல்லாமல் ஆதிக்க சாதியினரின்  பீடங்களை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் உருவி சமநிலைப்படுத்தினர்..அதன் உச்சமாக அண்ணா கொள்கை அளவில் பெரியாரியராக இருந்தாலும் மனதளவில் மிகப்பெரிய 'காந்தியன்' அந்த மனநிலையே  அவரை ரொம்பவும் நெருக்கமாக உணரச் செய்கிறது..

இப்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அவரை வாசிக்கிறார்கள்..அவருடைய தேவை இன்னும் முடியவில்லை..வெகு சீக்கிரத்தில் அவர் இந்தியாவுக்கான தலைவராக உணரப்படுவார்..
அண்ணாவை நினைவு கூர்வோம்.

- மானசீகன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset