நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெளிநாடுகளில் இயங்கும் மலேசிய நிறுவனங்கள் 335.2 பில்லியன் ரிங்கிட் ஈட்டியுள்ளன: புள்ளிவிவரத்துறை


கோலாலம்பூர்:

மலேசியர்களால் கட்டுப்படுத்தப்படும், வெளிநாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு 335.2 பில்லியன் அளவு வருமானம் ஈட்டியிருப்பதாக மலேசிய புள்ளி விவரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2108ஆம் ஆண்டு இந்தத் தொகையானது 330.9 பில்லியன் ரிங்கிட் ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அத் துறை, 2019ஆம் ஆண்டு அந்நிறுவனங்கள் சுமார் 4.3 பில்லியன் ரிங்கிட் அளவு அதிக வருவாயைப் பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

'வெளிநாடுகளில் உள்ள மலேசிய தொடர்புகள், நிறுவனங்கள் 2019' என்ற தலைப்பின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது புள்ளி விவரத்துறை. அதில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள மலேசிய நிறுவனங்கள், உள்நாட்டில் இயங்கும் நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளைகள், துணை நிறுவனங்கள், கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனங்களைப் பற்றி இந்த அறிக்கையின் மூலம் அறிய முடியும். மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் அனைத்திலும் மலேசியாவில் உள்ள தாய் நிறுவனமானது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டில் சேவைத்துறையின் ஆதிக்கமே அதிகம் இருந்தது என்றும், அவற்றின் வர்த்தகமானது 209.5 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என்றும் புள்ளிவிவரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் மொத்த வருவாயில் 6.2.5 விழுக்காடு சேவைத்துறை மூலமாக கிடைத்துள்ளது தெரிய வருகிறது.

மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், நிதி நடவடிக்கைகள் உள்ளிட்டவை சேவைத்துறையின் கீழ் இடம்பெறும்.

உற்பத்தித் துறை சார்ந்த, வெளிநாட்டில் உள்ள மலேசிய நிறுவனங்கள் மூலம் மொத்த வருவாயில் 24.3 விழுக்காடு கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்தில் சுரங்க மற்றும் குவாரித் துறை உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset