நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

250 மொழிகளின் கதி என்னவாயிற்று? நியூயார்க் நகரத்தில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

சில நாள்களுக்கு முன்னால் வெளியான செய்தி அது. இந்திய  நாட்டிலேயே பெங்களூர் மாவட்டத்தில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் செய்தி. 

அதற்கு அடுத்து நாகலாந்தின் திமாபூரும், அஸ்ஸாமின் சோனிட்பூரும் வருகின்றன. 

இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்ற செய்திதான் இது. இது கொண்டாடப்பட வேண்டிய தனிச் சிறப்பாகும். 

ஆனால் சில மதவெறியர்கள் முன் வைக்கின்ற ‘இந்து, இந்தி, இந்துஸ்தான்’ என்கிற முரட்டு முழக்கமும் மத, மொழிவெறியும் இந்த பன்மைத்தன்மைக்கு உலை வைப்பதாக இருக்கின்றன என்பது் கவலைக்குரியதாகும். 

1961-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் 1100 மொழிகள் உயிர்த்துடிப்புடன் இருந்தன. 2017-இல் வடோதாராவின் பாஷா ரிசர்ச் அண்டு பப்ளிகேஷன் சென்டர் என்கிற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த இடைப்பட்ட 56 ஆண்டுகளில் 250 மொழிகள் மறைந்து போன விவரம் தெரிய வந்தது. இன்னும் 50 ஆண்டுகளில் மேலும் 400 மொழிகள் செத்துப் போகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக சில தீய சக்திகள் ஓயாமல் மேற்கொண்டு வருகின்ற ‘இந்து, இந்தி, இந்துஸ்தான்’ பரப்புரையும், ஓயாத இந்தித் திணிப்பும், ஆங்கில மோகமும்தாம் சின்னச் சின்ன சமூகக் குழுக்களின் மொழிகள் அழிந்து போனதற்குக் காரணங்கள். 

நம்ம மொழிதானே, நாம் அன்றாடம் பேசிக் கொண்டிருக்கின்ற மொழிதானே, என்ன ஆபத்து வந்துவிடும் என்றெல்லாம் சும்மா இருந்து விடக் கூடாது என்பதைத்தான் இந்த விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. 

எத்தனையோ ஐரோப்பிய மொழிகள் அழிந்து போனதற்கு வேற்று மொழிகள் ஆட்சிமொழியாக திணிக்கப்பட்டதுதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

மொழித் திணிப்பும் கலாச்சாரத் திணிப்பும் மதவெறியும் மோதலுக்கும் பதற்றத்துக்கும் அமைதியின்மைக்கும்தாம் வித்திடும். 

அதே சமயம் வெவ்வேறு மொழிகளும் வெவ்வேறு மதங்களும் வெவ்வேறு பண்பாடுகளும் செழித்தோங்குவது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இணக்கமான சமூகச் சூழலுக்கும் வித்திடும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நியூயார்க் நகரத்தில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

600 அறுநூறு மொழிகள்.

நாம் நம் மொழியை வளர்க்கப்போகிறோமா? அல்லது அழிக்கப்போகிறோமா?

-A L

தொடர்புடைய செய்திகள்

+ - reset