நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குர்ஆன் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட இஸ்ரேலிய தூதரகத்திற்கு சிங்கப்பூர் அரசு கடும் எச்சரிக்கை: மன்னிப்பு கேட்டது தூதரகம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம், இஸ்லாத்திற்கு விர்த்தோதமாக அங்கீகரிக்கப்படாத தகவலைச் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஊழியரைக் கடுமையாகத் தண்டித்துள்ளது.

குர்ஆனில் இஸ்ரேல் குறித்து 43 முறை குறிப்பிடப்பட்டுள்ளது; பாலஸ்தீன வட்டாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவே இல்லை என்று இஸ்ரேலியத் தூதரகம் அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அந்தப் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது, அதனை உடனடியாக நீக்குங்கள் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கண்டனத்துடன் கூடிய உத்தரவிட்டிருந்தார்.

முகநூல் பதிவை அகற்றும்படியும் இதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படியும் இஸ்ரேலியத் தூதரகத்துக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது.

தூதரக ஊழியர் உரிய அனுமதியின்றி சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தை மதிப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அது கூறியது.

சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தை மதிப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அது சொன்னது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset