நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சர்வதேச சந்தையில் மலேசிய ரிங்கிட் சரிந்தது 

சிங்கப்பூர்:

மலேசிய ரிங்கிட் திங்களன்று காலை முதலே சரியாய் ஆரம்பித்துவிட்டது. இந்த வருடத்தின் அகக்குறைந்த மதிப்புடன் ரிங்கிட் வீழ்ச்சியடைந்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள பங்குச் சந்தையும் விழத் தொடங்கியுள்ளது. பிரதமர் ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியப் பிரதமர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் திங்களன்று பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த தகவலை ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதால் இந்த நிலை என்று பங்குச் சந்தை முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரிங்கிட் மதிப்பு ஒரு டாலருக்கு 4.2410 ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 2020 க்குப் பிறகு மிகக் குறைவானது, அதே நேரத்தில் வர்த்தகத்தின் முதல் சில நிமிடங்களில் FTSE பர்சா மலேசியா குறியீடு 0.6 சதவீதம் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset