நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் - ஜொகூர் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் புதிய பரிந்துரை

ஜொகூர்:

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையிலான சாலைச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அம்மாநில அரசாங்கம் ஒரு முறை மட்டும் சோதனை செய்யலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது.

அந்த முறையின்கீழ், சிங்கப்பூருக்குள் நுழைவோரைச் சோதனை செய்ய சிங்கப்பூர் அதிகாரிகள் ஜொகூர் சோதனைச் சாவடிகளில் பணியாற்றுவர்.

மலேசியாவுக்குள் நுழைவோரைச் சோதனை செய்ய மலேசிய அதிகாரிகள் சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் இருப்பார்கள்.

பரிந்துரை தொடக்கக்கட்டத்தில் உள்ளதாக The Star செய்தி நிறுவனம் கூறியது.

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையே 2026ஆம் ஆண்டு தொடங்கவுள்ள அதிவேக ரயில் சேவையிலும் அதுபோன்ற ஒரு சோதனை அமைப்பே நடைமுறைப்படுத்தப்படும்.

சிங்கப்பூருக்கும் ஜொகூருக்கும் இடையிலான நிலச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி பயணம் செய்யும் சுமார் 150,000 பேர் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset