நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

UAE, இந்திய தூதரகத்தில் தமிழருக்கு குடியரசு தின விழாவில் பாராட்டு

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சிறந்த சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஃபிர்தெளஸ் பாஷாவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வழங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கான பல்வேறு பிரச்சினைளை ஃபிர்தௌஸ் முன்னின்று தீர்த்து வருகிறார். பல சமூக நலத்திட்டங்களில் பங்கெடுத்துவருபவர். பன்முக ஆளுமை கொண்ட ஃபிர்தௌஸ் பாஷாவிற்கு சிறப்பு செய்வதில் பெருமை கொள்வதாக இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

குறிப்பாக, இந்திய தூதரக டுவிட்டர் பக்கத்தில் பிர்தெளஸ் பாஷாவைப் பாராட்டியும் பதிவிடப்பட்டிருந்தது.

பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள ஃபிர்தௌஸ் பல அறச் சேவைகளை செய்து வருகிறார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset