நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெறுப்புப் பேச்சுகள் தடுக்கப்படுவதில்லை: உச்சநீதிமன்றம் அதிருப்தி

புது டெல்லி:

வெறுப்பு பேச்சுகளை தடுக்க யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டது.

மும்பையில் வரும் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஹிந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா என்ற நிகழ்ச்சிக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை கோரப்பட்டது.

இதேபோன்ற நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டதாகவும், சுமார் 10,000 பேர் பங்கேற்றற அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் சமூகத்தினரை பொருளாதார, சமுகரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில்,  ஒவ்வொரு முறை இதுபோன்ற நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும்போதும் உச்சநீதிமன்றம் தடுக்க நடவடிக்கை எடுக்க  முடியாது. ஏற்கெனவே நாங்கள் தெளிவான உத்தரவுகள் பிறப்பித்துள்ளோம். நாடு முழுவதும் பேரணிகள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் தடை உத்தரவு பிறப்பிக்க முடியமா? நாங்கள் ஏற்கெனவே பல உத்தரவுகள் பிறறப்பித்துள்ள போதிலும், யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை' என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset