நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பொது சிவில் சட்டம் அமல் எப்போது?; முடிவெடுக்கவில்லை: இந்திய சட்ட அமைச்சர்

புது டெல்லி: 

இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று இந்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அவர் தாக்கல் செய்துள்ள பதிலில், பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு 21-ஆவது சட்ட ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் பதவிக்காலம் 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதால் இந்த விவகாரம் 22-ஆவது சட்ட ஆணையத்திடம் உள்ளது.

ஆகையால், பொது சிவில் சட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2020, பிப்ரவரி 21-ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் மத்திய அரசு நியமித்தது.

பிப்ரவரி மாத இறுதியில் 22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.  

பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என்று 2014, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.  

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset