செய்திகள் இந்தியா
மோடியைவிட அமைச்சர் ஜெய்சங்கர் அதிக வெளிநாட்டு பயணம்
புது டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆண்டு முதல் 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்; இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 86 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.20.87 கோடி என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ.முரளீதரன் தெரிவித்தார்.
இந்திய பிரதமராக மோடி 2014-இல் பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக பயணம் மேற்கொண்டார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போதும் அவர் அவையில் இருந்து தவிர்ப்பதற்கு வெளிநாடு பயணம் செல்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
2019-இல் இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு வெளியுறவு செயலாளரான ஜெய்சங்கர் அமைச்சராக பொறுப்பேற்றார். வெளிநாடுகளுக்கு அதிகபடியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். 2019 முதல் இதுவரை 86 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm
அரவிந்த் கெஜ்ரிவால் கைது ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்
March 22, 2024, 12:28 pm