நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் GREENWOOD ஐ உட்படுத்திய கற்பழிப்பு முயற்சி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

லண்டன்: 

மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் கிரீன்வூட்டை உட்படுத்திய கற்பழிப்பு முயற்சி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தகவல் பிரிட்டன் நாட்டின் காவல்துறை தரப்பு தெரிவித்தது. 

இந்த வழக்கின் முதன்மையான சாட்சியாளரும் மற்றும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களும் திரும்ப பெற்ற காரணத்தினால் GREENWOOD க்கு எதிராக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், வழக்கு விவகாரமானது சுமுகமாக முற்றுப்பெற்ற சூழ்நிலையில் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக GREEN WOOD தெரிவித்துக்கொண்டார். 

முன்னதாக,  GREENWOOD க்கு எதிராக கற்பழிப்பு முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதனால் அவர் காற்பந்து விளையாட தற்காலிக தடையை எதிர்நோக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மவித்திரன் கிருஷ்ணன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset