நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனுக்கு போர் விமானங்கள் இல்லை: பிரிட்டன்

பெர்லின்:

உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கப்படாது என பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

போர் விமானங்களை வழங்கப் போவதில்லை என அமெரிக்காவும் ஜெர்மனியும் கூறிவிட்டன.
இந்நிலையில் போர் விமானங்கள் வழங்க பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரிஷி சுனக் நிராகரித்துள்ளார்.

இது குறித்து ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக, அந்த நாட்டுக்கு போர் விமானங்கள் அனுப்பப்படாது.

பிரிட்டனின் போர் விமானங்களை இயக்குவதற்கு ஒருவர் முழுமையாக பயிற்சி பெற வேண்டுமென்றால் அதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால், ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து ரஷியாவை இந்த ஆண்டுக்குள் வெளியேறச் செய்வதற்குமான உதவிகளை அளிப்பதற்குத்தான் பிரிட்டன் அரசு முக்கியத்துவம் தருகிறது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset