நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இந்திய திரையுலகின் மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

ஹைதரபாத்:

இந்திய திரையுலகின் மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92 ஆகும்.

இந்திய திரையுலகில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முத்திரை பதித்த ஓர் இயக்குநராக அவர் வலம் வந்தார்.

கே.விஸ்வநாத் 53 படங்களை இயக்கியுள்ள நிலையில் தமிழில் குருதிப்புனல், உத்தம வில்லன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

சாகரசங்கமம் திரைப்படம் இவர் இயக்கிய திரைப்படங்களில் மைல்கல்லாக அமைந்தது. அதுவே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சலங்கை ஒலி எனும் பெயரில் வெளிவந்தது.

கே.விஸ்வநாத் காலமானதை அடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டுள்ளனர். 

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset