நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?

கோலாலம்பூர்:

அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அம்னோ உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை தவிர்த்து இதர பதவிகளுக்கு கடும் போட்டி நிலவும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அம்னோ முன்னாள் மகளிர் பிரிவு தலைவி டான்ஸ்ரீ ஷாரிசாட் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவியாக தற்போது டத்தோ நோராய்னி அஹ்மத் பதவி வகித்து வருகிறார்.

இத் தேர்தலில் அப்பதவியை தற்காக்க நோராய்னி களமிறங்கினாலும் அவரை எதிர்த்து போட்டியிட ஷாரிசாட் தயாராகி உள்ளதாக தகவல் கூறுகிறது.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset