செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியின் 1,888 போலீஸ் அதிகாரிகள் ஈடுப்படவுள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஏசிபி ஜைனல் முஹம்மத் கூறினார்.
தைப்பூச விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதில் பத்துமலையில் இவ்விழா மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே பக்தர்கள பத்துமலைக்கு வர தொடங்கி விட்டனர்.
கடந்த ஈராண்டுகளுக்கு பின் பத்துமலையில் 20 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் 2ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை பத்துமலை சுற்றுவட்டரத்தில் வாகன நெரிசல்கள் அதிகம் இருக்கும்.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 1,888 போலீஸ் அதிகாரிகள், 11 இதர அரசு நிறுவன அதிகாரிகள் பத்துமலையில் பணியில் ஈடுப்படவுள்ளனர்.
மேலும் பத்துமலை சுற்று வட்டாரத்தில் 7 முக்கிய சாலைகள் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மூடப்படவுள்ளது.
ஆகவே பத்துமலைக்கு வரும் பக்தர்களில் போலீஸ் அதிகாரிகளின் வழிக்காட்டல்களை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பத்துமலைக்கு வரும் பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை நிறுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
பக்தர்கள் சுவாசக் கவசம் அணிந்து கொள்ள ஊக்குவிக்கப்படுறது. திருடும் அபாயம் கொண்டு பொருட்களை எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள், வயதானவர்கள், உடற்பேரு குறைந்தவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே பக்தர்கள் பாதுபாப்புடன் பத்துமலைக்கு வந்து செல்ல வேண்டும் என்று ஏசிபி ஜைனல் முஹம்மத் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:08 pm
பந்திங்கில் இறுதிசடங்கின் ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடிக்க செய்த ஆடவர் போலீசாரால் கைது
March 29, 2024, 12:34 pm
நாட்டில் 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை: நிக் நஸ்மி
March 29, 2024, 12:31 pm
உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
March 29, 2024, 10:42 am
4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
March 29, 2024, 10:30 am
விரைவு பேருந்து தடம் புரண்டது: காராக் நெடுஞ்சாலையில் மோசமான நெரிசல்
March 29, 2024, 10:28 am
அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் விடுவிப்பை மீட்டெடுக்க மொஹைதின் முயற்சி
March 29, 2024, 10:26 am