நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தளபதி 67 திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைபற்றியது- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைபற்றியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சற்றுமுன் கிடைத்த தகவலின்படி நெட் ஃபிளிக்ஸ் ஒடிடி தள ஒளிபரப்பை வாங்கியுள்ளது.

இந்த தளபதி 67 திரைப்படத்தில் நடிகர்கள் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் நடிக்கும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

தற்போது இந்த திரைப்பத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலில் இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். 

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset