நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

HSR திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக வழக்கு: தற்காப்பு வாதம் புரிய துன் டாக்டர் மகாதீர், டான்ஶ்ரீ முஹைதீன் யாசினுக்கு உத்தரவு

கோலாலம்பூர்:

HSR திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர், டான்ஶ்ரீ முஹைதீன் யாசின் இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் மற்றும் இதர மூவரும் தற்காப்பு வாதம் புரிய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

துன் டாக்டர் மகாதீர், டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பெயர்களைத் தொடர்ந்து டத்தோஶ்ரீ முஸ்தஃபா முஹம்மத், டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் மலேசிய அரசாங்கம் என அனைத்தும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு மலேசிய - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டமான HSR திட்டத்தை ஒத்திவைத்தது தொடர்பில் மலேசியர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோயின.

அத்துடன் மலேசியா 36 கோடியே 60 லட்சம் ரிங்கிட் சிங்கப்பூர் நாட்டிற்கு இழப்பீட்டு தொகையாக வழங்க நேரிட்டது. மேலும், 2021ஆம் ஆண்டு டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்தது. 

HSR திட்டம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முஹம்மத் ஹத்தா எனும் மலேசியர் இரு முன்னாள் பிரதமர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இந்த வழக்கை தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- மாவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset