நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம் 

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் கோடிக்காட்டி உள்ளார்.

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் உள்ள மூன்று மாநிலங்களின் மந்திரி புசார், முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.

இக்கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும். அக்கூட்டத்தி தேர்தலுக்கான தேதி உறுதி செய்யப்படும்.

வரும் ஜூன் 1ஆம் தேதி சட்டமன்றத்தை கலைக்கலாம் என பரிந்துரையை வழங்கவுள்ளேன்.

சிலாங்கூர் மந்திரி புசாரும் பினாங்கு முதலமைச்சரும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஜூ 1ஆம் தேதி கலைக்கப்பட்டால் அந்த தேதியில் இருந்து 60  நாட்களின் தேர்தல் நடத்தலாம். 

 கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி ஜூன் 18ஆம் தேதி கெடா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மந்திரி புசார் அமிரூடின் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset