நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்மூடித்தனமான காய்கறிகளின் விலை உயர்வை நிறுத்துங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேதனை

பினாங்கு:

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சும் மத்திய விவசாய சந்தைப்படுத்தல் ஆணையமும் (FAMA) பாமா 160% வரை அதிகரித்துள்ள காய்கறிகளின் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், காய்கறிகளின் விலைகள் எவ்வித காரணமும் இல்லாமல் தொடர்ச்சியாக உயர்வு கண்டுள்ளது பயனீட்டாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார் அவர்.

5 Must Visit Markets in Penang - The Roaming Fork

விலைகள் ஒப்பீடு:

வெண்டைக் காய் (பெண்டி)
மவெ 6.00 லிருந்து
மவெ 16.00 உயர்வு.
166% விலை உயர்வு.

பயிற்றங்காய் 
மவெ 6.00 லிருந்து
மவெ.12.00க்கு. 100% உயர்வு.

தக்காளி
மவெ 4.50 லிருந்து
மவெ 10.00 க்கு விற்கப்படுகின்றது. 120% உயர்வு.

பீன்ஸ்
மவெ 6.00 லிருந்து 
மவெ 12.00 வரை. 
100% விலை உயர்வு.

கத்திரிக்காய்
மவெ 7.00 முதல் மவெ 12.00 வரை 
71% உயர்வு.

எதிர் வரும் வாரங்களில் மற்ற காய்கறிகளின் விலை உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் எச்சரித்ததாக பல சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம்  புகார் தெரிவித்தனர் என முஹைதீன் கூறினார்.

இதன்மீது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் அமலாக்கப் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்  சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆதாயச் சட்டம் 2010:

இடைத்தரகர்களின் லாபவெறியை ஒழிக்க, நாட்டில் காய்கறிகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த பாமாவுக்கு பி.ப.சங்கம்  பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால் எங்கள் கோரிக்கை செவிடன் காதில் விழுந்த கதைதான்
என்றார் முஹைதீன் அப்துல் காதர்.

சம்பந்தப்பட்ட அரசாங்க இலாக்காகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மெத்தன போக்கை கடைபிடிக்கக் கூடாது என்றார் அவர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset