நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

துபாய் அனைத்துலக பொருளாதார மாநாடு உலக வர்த்தகர்களை ஒன்றிணைக்கும்

கோலாலம்பூர்:

துபாய் அனைத்துலக பொருளாதார உலக வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் என்று அம்மாநாட்டின் நிறுவனர் முனைவர் வி.ஆர்.எஸ் சம்பத் கூறினார்.

உலக தமிழர் பொருளாதாரம் மன்றம், சென்னை வளர்ச்சி கழகம் ஆகியவை இணைந்து இந்த உலக பொருளாதார மாநாட்டை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் ஒன்பதாவது மாநாடு வரும் மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

உலக நாடுகளில் இருந்து 1,000த்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்த மாநாடுகளுக்கு மலேசியாவில் இருந்து சிறப்பான ஆதரவு கிடைத்து உள்ளது.

மறைந்த முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துன் சாமிவேலு எங்களுக்கு பெரும் ஆதரவாக இருந்துள்ளார்.

மேலும் தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனம், வர்த்தக இயக்கங்கள் ஆகியவையும் இம்மாநாட்டுக்கு முழு ஆதரவு வழங்கி உள்ளன.
இதே போன்று இவ்வாண்டு மாநாட்டிற்கும் மலேசியாவில் இருந்து முழு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.

குறிப்பாக 500க்கும் மேற்ப்பட்ட பேராளர்கள் மலேசியாவில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக சம்பத் கூறினார்.

180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் துபாயில் வசித்து வருகின்றனர். இதில் 35 லட்சம் பேர் இந்தியர்களாவர். அதிலும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் தமிழர்களாவர்.

இப்படிப்பட்ட ஒரு மண்ணில் இந்த உலகப் பொருளாதார மாநாட்டை நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  உலகம் முழுவதுமிலிருந்து வரும் பேராளர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.

குறிப்பாக, உலகம் முழுவதும் பறந்து கிடக்கும் இந்திய - தமிழ் வர்த்தகர்களிடையே ஒரு கூட்டுறவை ஏற்படுத்தும் நோக்கில்தான் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் மூலம் தங்களின் வர்த்தகத்தையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

அதேவேளையில் கண்காட்சி, சிறப்பு விவாதங்கள், சொற்பொழிவுகள்,  விருது வழங்குதல், கலை நிகழ்ச்சி என இம்மாநாடு மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று ஒன்பதாவது உலகப் பொருளாதாரம் மாநாட்டின் தலைவர் அபித் ஜுனைத் கூறினார்.

உலக பொருளாதார மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏழு அமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள், உலக நாடுகளின் பல தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலக வர்த்தக மக்களை ஒன்றிணைக்கும் மலேசியத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் அதிலும்  தமிழர்கள் ஒன்றிணையும் போது அது மிகப்பெரிய வளர்ச்சியாக மாறும். அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் இந்த மாநாடு என்று அம்மாநாட்டின்  உதவித் தலைவரும் இந்திய ஹஜ் சங்கத்தின் தலைவருமான அ. அபூபக்கர் கூறினார்.

இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு  www.economic.conference.com எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset