நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

48 மணி நேரத்தில் 51 பில்லியன் டாலர் இழப்பு: சரியும் கோடீஸ்வரர் அதானியில் சாம்ராஜியம்

மும்பை:

நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கோடீஸ்வரர் அதானியின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வௌயான நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் கிட்டத்தட்ட 51 பில்லியன் டாலர் வரை இழப்பை கண்டன.

இது 48 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஒன்பது அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகின.

அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 17 சதவீதம் கடுமையாக சரிந்தன.

அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 12 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.

குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 3.5 சதவீதம் சரிந்தது.

இந்த நிலையில் அதானி தரப்பில் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதானி குழுமத்தின் சட்டத்துக்கு புறம்பான வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டம் பல ஆண்டுகளாக நடத்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கிடையில், ஹிண்டன்பெர்க் ரிசர்ச், அதன் அறிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் தகுதியற்றது என்று கூறியுள்ளது.

மேலும்,  எங்கள் அறிக்கையின் முடிவில், 88 நேரடியான கேள்விகளை நாங்கள் கேட்டோம்.

இதுவரை, அதானி இந்தக் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset