நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அதானியின் சரிந்த நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ முதலீடு: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புது டெல்லி:

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை நிதி முறைகேடு புகார் குறித்து பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியும், ரிசர்வ் வங்கியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதானி நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ முதலீடு செய்துள்ளதால் மக்கள் பணம் அபாயத்தில் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது தீவிரமான நிதி முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் வங்கிகளே அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வராதபோது, பொதுத் துறை நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்துள்ளன.

எல்ஐசியின் ரூ.74 ஆயிரம் கோடியும் எஸ்பிஐயின் சுமார் 40 சதவீத நதியும் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான இந்தியர்களின் சேமிப்பு தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.

பங்குகளின் விலை செயற்கையாக அதிகரித்து அதானி குழுமம் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது.  இதனால் அந்த வங்கிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.          

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போதில் இருந்தே அதானி குழுத்துடன் நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

-- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset