செய்திகள் கலைகள்
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழில் பாடும் சித்தி நூர்ஹலிசா
கோலாலம்பூர்:
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நாட்டின் முன்னணி தேசிய பாடகி சித்தி நூர்ஹலிசா தமிழில் பாடவுள்ளார்.
டிஎம்ஒய் நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் ஏஆர் ரஹ்மானின் சீக்ரட் ஆப் சக்ஸஸ் இசை நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் சித்தி நூர்ஹலிசா தமிழில் பாடவுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது அபிமான இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் அண்மையில் மலேசியா வந்தார்.
அவரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் முன்வைத்தேன்.
ஏற்பாட்டாளர்கள் ஏஆர் ரஹ்மான் அவர்களை என் வீட்டிற்கு அழைத்து வந்து மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அதே வேளையில் அவரின் இசை நிகழ்ச்சியில் எனக்கு பாட அனுமதி கிடைத்து எனக்கு பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.
அவர் இசையமைத்த தமிழ் பாடலை நான் பாட வேண்டும் என்பது எனக்கு முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்.
அவரின் வழிகாட்டலுடன் பயிற்சிகளை மேற்கொண்டேன். இருந்தாலும் பயிற்சியின்போது அவருக்கு முன் அப் பாடலை பாடும் போது மிகவும் பதட்டமாக இருந்தது.
முழு பயிற்சிக்கு பின் நாளை அப் பாடலை மேடையில் சிறப்பாக பாடுவேன் என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன் என்று சித்தி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:22 am
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா
March 29, 2024, 10:18 am
இயக்குநர் லோகேஷின் தலைவர் 171 படத்தின் தலைப்பு ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm