நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஜி.எஸ்.டி நாட்டின் கடன் சுமையைக் குறைக்க உதவும் 

பெட்டாலிங் ஜெயா: 

சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி எனப்படும் பொருட் சேவை வரி அரசாங்க வருவாயின் சரிவைக் குறைக்கவும் ரிங்கிட் 1.5 ட்ரில்லியனை எட்டியுள்ள நாட்டின் கடனையுக் குறைக்க உதவும் சிறந்த வழி என்று ஒரு பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். 

பொருட் சேவை வரியில் சில பலவீனங்கள் இருந்தாலும்  தற்போதைய விற்பனை சேவை வரி (எஸ்எஸ்டி)- யை விட மறைமுக வரிகளுக்கு ஜி.எஸ்.டி மிகவும் வலுவான அமைப்பாகும் என்று பேங்க் இஸ்லாமின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஃபிர்தாஸ் ரோஸ்லி கூறினார்.

ஜி.எஸ்.டி கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அன்றைய பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி 
அன்றாடத் தேவைப்படும் உணவுப் பொருட்களையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் உள்ளடக்கியது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டின் சுங்கத் துறை ரி.ம 41.2 பில்லியனையும் 2017-ஆம் ஆண்டில் ரி.ம 44.3 பில்லியனையும் வரித் தொகையாக வசூலித்துள்ளது. 

இருப்பினும், இந்தப் பொருட் சேவை வரியானது மக்களின் சுமையை அதிகரிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சியினருக்குச் சாதகமாக நஜிப் ரசாக்கின் அரசாங்கம் 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 14-ஆவது பொதுத் தேர்தலில் கவிழ்க்கப்பட்டது. 

புதிய அரசாங்கமான நம்பிக்கை கூட்டணி அரசு அந்த ஆண்டு ஜூன் மாதம் ஜி.எஸ்.டி வரியை உடனடியாக இரத்து செய்து, அதற்கு பதிலாக எஸ்.எஸ்.டி என்ற விற்பனை சேவை வரியை அமல்படுத்தியது. 

ஜி.எஸ்.டியை மீண்டும் அறிமுகப்படுத்த இன்னும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அதே போல் முன்பு விதிக்கப்பட்ட 6% விழுக்காடு விதிக்காமல் (2%-3%) குறைந்த தொடக்க விழுக்காடை அமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

- அஷ்வினி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset