நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வேலையிழப்பு: 30 முதல் 40% இந்தியர்கள் வேலையிழந்தனர்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரை சுமார் 2 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 30 முதல் 40 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா காலம் நிறைவடைவதற்குள் வேறு வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக கூகுள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், ஃபேஸ்புக், அமேஸான் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஹெச்1பி விசா வைத்துள்ளோர் பணியை இழக்க நேரிட்டால், 60 நாள்களுக்குள் புதிய வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டும் என்ற விதி உள்ளது.

அதன் காரணமாக, பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset