நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கடும் மழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை

குற்றாலம்:

வெள்ளப் பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் முதன்மை அருவி, பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே முதன்மை அருவியைத் தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ஆம் தேதி சீரானது. 

இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த சூழலில் முதன்மை அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. 

இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகள் முதன்மை அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக தடை விதிக்க உத்தரவிட்டார். 

இதனிடையே வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset