நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டாயேஷ் தீவிரவாத குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்

பெய்ரூட்: 

டாயேஷ் குழுவின் தலைவரான அபு அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, சமீபத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்தக் குழுவின் செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் கொடிய தாக்குதல்களை நடத்தி கிளர்ச்சிக் குழு மீண்டு வர முயற்சித்ததால், இந்த ஆண்டு கொல்லப்பட்ட இரண்டாவது தலைவர் அல்-குரேஷி ஆவார்.

தென் மாகாணமான தாராவில் சிரிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய நடவடிக்கையில் அக்டோபர் நடுப்பகுதியில் அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அல்-குரைஷி கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் இப்போது மட்டும் ஏன் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறித்த விளக்கப்படவில்லை.

"டாயேஷ் குழுவானது  CENTCOM க்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தங்களின் சக குழுவின் தொடர்ச்சியான தோல்வியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர்" என்று மத்திய அமெரிக்க கமாண்டோ பிரிவு கூறியது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அக்டோபர் நடுப்பகுதியில் சிரிய கிளர்ச்சியாளர்கள், முன்னதாக அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு, தாராவில் உள்ள தெற்கு கிராமமான ஜஸ்செமில் டேஷ் தீவிரவாதிகளின் குழுவைக் கொன்றனர்.

அவர்களில் ஒருவர் லெபனான் போராளி ஆவார். இன்னொருவர்  ஈராக்கி என அடையாளம் காணப்பட்ட ஒரு தளபதியும் அடங்குவர், அங்கு டாயேஷ் தீவிரவாதிகள் போரின் போது அவர் பெல்ட்டில் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

வடமேற்கு சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கத் தாக்குதலில் அதன் முந்தைய தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி இறந்ததைத் தொடர்ந்து அல்-குரைஷி குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

2017-இல் ஈராக்கிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவிலும் தோற்கடிக்கப்பட்ட குழுவிற்கு இவரது மரணம் பெரும் அடியாக இருந்தது. இந்த குழு சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளில் கொடிய தாக்குதல்களை நடத்த முயன்றபோது  டாயேஷின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜரின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

குழுவின் புதிய தலைவராக அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குரைஷி நியமிக்கப்பட்டுள்ளதாக அல்-முஹாஜர் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, குழுவின் மற்றொரு தலைவரின் இந்த மரணம் குறித்த செய்தியை அவரது தரப்பு நிச்சயமாக வரவேற்கும் என்று கூறினார்.

2019 அக்டோபரில் வடமேற்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் டாயேஷின் நிறுவனர் அபு பக்கர் அல்-பாக்தாதி வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதில் இருந்து கொல்லப்பட்ட மூன்றாவது தலைவர் அல்-குரைஷி ஆவார்.

அபு அல் ஹசனின் கொலைக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

டாயேஷ் குழு சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அல்-கொய்தாவிலிருந்து பிரிந்து, இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு சிரியா மற்றும் வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி வந்தது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset