நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஃபிரான்ஸ் அணியை வீழ்த்திய ஆறுதலுடன் வெளியேறியது துனிசியா

தோஹா:

ஃபிரான்ஸ் அணியை வீழ்த்திய ஆறுலுடன் துனிசியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

டி பிரிவில் உள்ள துனிசியா-ஃபிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. 

அத்துடன், ஃபிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது.

ஃபிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset